மொத்த வருவாய் வரவுகளில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக உள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் மதிப்பீடுகளை, 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாகக் குறைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன்.
» தமிழகத்தை 10 ஆண்டுகளுக்குள் குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற உறுதி: பழனிவேல் தியாகராஜன்
» தமிழ்நாட்டுக்கு தனியாக மாநிலக் கல்விக் கொள்கை: நிதியமைச்சர் அறிவிப்பு
* மொத்த வருவாய் வரவுகளில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள், 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் சற்றுக் குறைவாக உள்ளது.
* 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் 2,61,188.57 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
* கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளின் தாக்கத்திலிருந்து மாநிலத்தின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், நிதிச் சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும் வரவில்லை. எனவே, 2021-22 ஆம் ஆண்டில் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என தவறாக கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உண்மையில் 58,692.68 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற அசாதாரணமான காலத்தின் காரணமாக, வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது எனவும், இனிவரும் காலங்களில், நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பில், இந்த அரசின் உறுதியை எள்ளளவும் பாதிக்காது என்பதையும் உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
* மூலதனச் செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 43,170.61 கோடி ரூபாய் திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 42,180.97 என குறைக்கப்பட்டுள்ளது.
* இந்த அடிப்படையில், 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 92,529.43 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2021-22 ஆம் ஆண்டுக்கு நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என, பதினைந்தாவது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.
* தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தம் ஆகும். வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, 2006-07 ஆம் ஆண்டில் 8.48 சதவீதமாக இருந்த தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 2020-21 ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதம் என 3.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பைக் குறிக்கிறது. இது இந்த மாநிலத்தால் சரி செய்ய வேண்டிய இழப்பாகும்.
* தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசுக்கு பலனளிக்கக்கூடிய விதமாக 'சமாதான் திட்டம்' அறிவிக்கப்படும்.
* மோசடியான ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்ட உண்மையான உரிமையாளர்களின் துயரத்தை நீக்க 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை திருத்தி, அத்தகைய ஆவணங்களின் பதிவை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
* உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு பதிவு மற்றும் வாடகை ஒப்பந்த ஆவணங்களை இணைய வாயிலாகவே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். 1.1.1975 முதல் மட்டுமே வில்லங்கச் சான்றினை இணையவழியில் பார்க்க முடியும். இந்த வசதி, 1.1.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவு செய்யப்படும். அதற்கு முந்தைய ஆவணங்களும் பட்டியலிடப்பட்டு கணினிமயமாக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago