கோவையில் ரூ.225 கோடி மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* சுற்றுப்புறம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும்.
» பழநி முருகன் கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி: பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்
» மாற்றுத் திறனாளிகளுக்கு உலக வங்கி உதவியுடன் ‘ரைட்ஸ்’ திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
* இது தவிர, பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ஒன்று பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ந.சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
* மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை, குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் வணிகத் திறனின் அடிப்படையில் நிதி நிறுவனங்களும் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்கிட ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டைப் பெற முயலும் இந்நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்து, 30 லட்சம் ரூபாய் வரை பட்டியல் இடும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.
* முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்பதற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் (TReDS), அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.
* ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ ரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து (Smart mobility) ஆகிய துறைகளிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.
* 265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.
* ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.
* வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.
* நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழகத்தில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் 'நிதிநுட்ப கொள்கை' ஒன்று வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான 'நிதிநுட்ப பிரிவு' ஒன்று அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதல்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000 ஆம் ஆண்டில் சென்னையில் கருணாநிதியால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழகத்திலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* ஓசூர், சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்த போதிலும், அதற்கான மத்திய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (Play & Play facilities) உட்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.
*அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்துக்கு மானியங்களை வழங்குவதற்காக, 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 எனும் நவீன தரத்துக்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதனால், மேலும், சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நெய்வேலியில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்வதற்காக, எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
* தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்துக்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago