தமிழக பட்ஜெட்: ஆண்டுதோறும் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது

By செய்திப்பிரிவு

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் நாள் பத்து லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும்.

* 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் நாள் பத்து லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.

* தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தபப்டும்.

* தமிழ் இணையக்கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துருஅனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

* உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

* தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கபபடும்.

* உயர்கல்வி மாணவர்களுக்காக தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

* சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டதை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

* கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

* தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் ஒதுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்