பட்ஜெட் 2021; காவல் துறை தரம் மீட்டெடுக்கப்படும்: 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்

By செய்திப்பிரிவு

தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் வெளியீட்டில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது , “ தமிழக காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும்.

பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

காவல்துறை பணியிடங்களில் காலியாக உள்ள 14, 317 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்பு துறையில் உள்ளவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படும். ” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்