புதுச்சேரியில் 109 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 7.50 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஆக.12) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,554 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-77, காரைக்கால்-10, ஏனாம்-1, மாஹே-21 என 109 (1.96 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 714 பேரும் என மொத்தமாக 914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 61 வயது மூதாட்டி, மாஹேவைச் சேர்ந்த 86 வயது முதியவர் என இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,803 அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 59 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 272(97.77 சதவீதம்) ஆக இருக்கிறது.
» ஓசூரில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.5,000 கோடி: பட்ஜெட்டில் ஒதுக்க எதிர்பார்ப்பு
» ஆக. 15-ல் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை: தமிழக அரசு உத்தரவு
இதுவரை 15 லட்சத்து 63 ஆயிரத்து 244 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 12 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரத்து 665 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago