புதுச்சேரியில் ரூ. 10,100 கோடிக் கான பட்ஜெட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இம்மாத இறுதிக்குள் பேரவை யைக் கூட்டத் திட்டமிட்டு, அதற்கான கோப்பு முதல்வரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படவில்லை.
அப்போதைய காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் மத்திய அரசே நேரடியாக புதுவைக்குரிய 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தேர்தல் முடிந்து, ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இதற்கிடையே, ரூ.10,100 கோடியில் நடப்பு நிதியாண் டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதி கோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு இதுவரையில் வழங்கவில்லை.
இதுபற்றி முதல்வர் அலுவலக தரப்பில் விசாரித்த போது, " கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி, சுதந்திரத்தி னத்துக்கு பிறகு முதல் தவணை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளார். அதையடுத்து டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கிறார். அதையடுத்து பட்ஜெட் தாக்கலாகும்" என்று குறிப்பிட்டனர்.
பட்ஜெட் தாக்கல் தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, " சட்டப்பேரவையைக் கூட்டுவது தொடர்பாக பேரவைத்தலைவர் செல்வத்துடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். முதல்வர் டெல்லி சென்று வந்த பிறகு இம்மாத கடைசி வாரத்தில் சட்டப்பேரவை கூட்டப்படவுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையாற்றுவார்.
அடுத்த நாள் பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம்நடக்கும். பேரவையை கூட்டுவதற்கான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச் சேரிக்கு ஆளுநர் திரும்பியவுடன் ஒப்புதல் கிடைத்து அறிவிப்பு வெளியாகும்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago