பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையால் மதுரை நகரில் ‘போக்ஸோ’ வழக்குகள் அதிகரிப்பு: செல்போன் பயன்பாட்டை குறைக்க காவல்துறை அறிவுறுத்தல்

By என்.சன்னாசி

மதுரை நகரில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதி கரிப்பால் ‘போக்ஸோ’ வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் கரோனா ஊர டங்கால் 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் பங் கேற்கின்றனர். பல மணி நேரம் தனிமையில் இருப்பதால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பிவிடுகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். மேலும், வறுமை காரணமாகவும், கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண் ணத்திலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய் வதும் அதிகரித்துள்ளது.

இதனால், ‘போக்ஸோ’ மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன.

மதுரை நகரில் கடந்த 8 மாதங்களில் மகளிர் காவல் நிலையங்களில் மதுரை நகர், தெற்குவாசல் - தலா 6, தல்லா குளம்-15, திருப்பரங்குன்றம் -11 என 68-க்கும் மேற்பட்ட ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவாகி யுள்ளன. நகரிலுள்ள பிற சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் 27 வழக்குகள் பதிவாகி உள்ளன.

திருப்பரங்குன்றம், தல்லா குளம் காவல் நிலையப் பகுதி களில் சிறுமிகளுக்கு பாலி யல் தொல்லைகள் அதிகமாக நடந்துள்ளன. 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

மதுரை காவல் உட்கோட் டங்களில் திருமங்கலம்- 22, மேலூர்-9, உசிலம்பட்டி-6, ஊமச் சிகுளம்-9, சமயநல்லூர்-14, பேரையூர்-10 என மொத்தம் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலம் பகுதியில் இந்த ஆண்டில் 8 மாதத்தில் 22 ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன.

குழந்தைத் திருமணம் தொடர் பாக 7 வழக்குகள் பதிவாகி யுள்ளன. மாநகரைவிட, புறநகரில் ‘போக்ஸோ’ வழக்கு கள் அதிகரித்து இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை நகரில் 2020-ம் ஆண்டில் 8 மாதங்களில் 63 வழக்குகள் பதிவாகின. அதேநேரத்தில் இந்த ஆண்டு (2021) ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 68 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதுகுறித்து மகளிர் போலீ ஸார் கூறுகையில், ‘‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, போக்ஸோ சிறப்புச் சட்டம் இருந்தும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. கடந்த ஓராண்டாகவே பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவிகள் பலர் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் செல்போனில் இருப்பதால் ஆண் நண்பர்களுடன் பழகி, தவறான வழியில் செல்கின்றனர். ஆசை வார்த்தைகளை நம்பி சிலர் வீட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்களும் நடக்கின்றன. பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு தவிர, பிற நேரங்களில் செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண் டும். குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்