ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: தமிழக அரசின் அறிவிப்புக்கு புதுவை ஆளுநர் தமிழிசை வரவேற்பு

By செ. ஞானபிரகாஷ்

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராக உள்ளார். தெலங்கானா சென்று அங்கு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு தற்போது டெல்லியில் தெலங்கானா பவனில் உள்ளார். அப்போது மரியாதை நிமித்தமாக மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகனை ஆளுநர் தமிழிசை சந்தித்துள்ளார். இணையமைச்சர் முருகனுக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் இன்று இணையத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திர சோழனின் பெயரைச் சூட்டி அவரது உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்தது.

அதேபோல, மும்பையிலிருந்து லண்டன் செல்லும் அரசின் ஏர் இந்தியா போயிங்-747 விமானத்திற்கும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டியது என்பதையும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்து பதிவிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்