கோவை பீளமேட்டில் உள்ள, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், எஸ்.பி.வேலுமணி மட்டுமின்றி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சந்திரபிரகாஷ், கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் உரிமையாளர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் கு.ராஜன் ஆகியோர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருடன் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். அதன்படி, அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடந்தினர். அங்கு காலை முதல் இரவு வரை சோதனை நடந்தது.
» ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்
» கரோனா விதிமீறல்: சென்னையில் 933 வழக்குகள் பதிவு; 336 வாகனங்கள் பறிமுதல்
இதைத் தொடர்ந்து, இன்று (ஆக.11) இரண்டாவது நாளாக பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் 2 தளங்களில் கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. காலை முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கேசிபி நிறுவனத்தினர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாகங்களின் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்து வந்தனர். மாநகராட்சியில் இந்நிறுவனத்தினர் மேற்கொண்ட திட்டப்பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தொடர்ச்சியாக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் மேற்கண்ட நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago