7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

நீலகிரி, சேலம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும்டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று வெளியிட்ட அறிக்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.

12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், 13-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சேலம், திருப்பத்தூர், வேலூர், திரு வண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE