முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம்: கி.வீரமணி வலியுறுத்தல்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெளியிட்ட வெள்ளை அறிக்கை வரக்கூடிய பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டமாகும். இது தற்போது அமைந்துள்ள தமிழக அரசு, வெளிப்படைத்தன்மையோடு இருப்பதை காட்டுகிறது.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனையிடுவது என்பது பழிவாங்கும் செயல் அல்ல, அவை ஆதாரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் ஊழலில் சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE