தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத் தில் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா தீர்த்தப் பிரசாதத்தை நேரடியாகவும், அஞ்சல் மூலமாக வும் பெற்றுக்கொள்ள அறநிலையத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.
இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் டி.கஜேந்திரன், உதவி ஆணையர் எஸ்.ஞானசேக ரன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த தீர்த்த பிரசாதத்துக்கான பையில் மகாமக தீர்த்தம், கும்ப கோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில் கள் மற்றும் 5 வைணவ கோயில் களின் விபூதி, குங்குமப் பிரசாதங் கள், கற்கண்டு மற்றும் கும்ப கோணம் கோயில்களின் வரலாறு புத்தகம் ஆகியவை இருக்கும்.
இந்த தீர்த்தப் பிரசாதத்தை கும்பகோணத்தில் உள்ள கோயில் களில் ரூ.100 செலுத்தி பிப்ரவரி 14-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர தமிழகத்தில் உள்ள 42 முக்கிய கோயில்களில் அஞ்சல் மூலம் பெறுவதற்கு ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை பிப்ரவரி 16 முதல் முன்பதிவு செய்தவர்களின் முகவ ரிக்கு அஞ்சலகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், நாடு முழுவதும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களி லும் தீர்த்தப் பிரசாதம் பெற பிப்ர வரி 5 (இன்று) முதல் முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
மேலும், மகாமகப் பெரு விழாவுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள www.mahamaham2016.in என்ற இணைய தளத்திலும் தீர்த்தப் பிரசாதத்துக்கு முன்பதிவு செய்யலாம்.
இதற்கென ஏறத்தாழ ஒரு லட்சம் தீர்த்தப் பிரசாத பைகள் தயாரிக்கப்படவுள்ளன என்றனர்.
தீர்த்தப் பிரசாதத்துக்கு முன் பதிவு செய்யப்படும் கோயில்கள் விவரம்:
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை, திருவேற்காடு, திருப் பரங்குன்றத்தில் உள்ள சுப்பிர மணிய சுவாமி கோயில்கள், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், பன்னாரியம்மன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவானைக்கா அகி லாண்டேஸ்வரி கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயு மான சுவாமி கோயில், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சேலம் சுகவனேஸ் வரர் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பவானி சங்க மேஸ்வரர் கோயில், மயிலாப்பூர் மாதவபெருமாள் கோயில் மற் றும் முண்டகக்கண்ணியம்மன் கோயில், அ.கோ. படைவீடு ரேணு காம்பாள் கோயில், மேல்மலை யனூர் அங்காளம்மன் கோயில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் புன்னைநல் லூர் மாரியம்மன் கோயில், திருக் குற்றாலம் குற்றாலநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சிக்கல் நவநீதேஸ் வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தீர்த்தப் பிரசாதத்துக்கு முன்பதிவு செய்ய லாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம் மன் கோயில், கோவை கோணி யம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும், கும்பகோணத் தில் உள்ள கோயில்களிலும் தீர்த்தப் பிரசா தத்தை பிப்ரவரி 16-ம் தேதி முதல் நேரடியாக பெற்றுக் கொள்ளவும் அற நிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago