திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தீவிரப் படுத்தி பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தி.மலை நகரம் பெரியார் சிலை அருகே திண்டிவனம் சாலையில் ரயில்வே ‘கேட்' (விழுப்புரம்–காட் பாடி ரயில் பாதை) இருந்தது.ஒரு நாளைக்கு சுமார் 20 முறை மூடி திறக்கப்பட்டது. சேத்துப்பட்டு, செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வழித்தடம் என்பதால், ரயில்வே ‘கேட்' பகுதியின் இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
இதனால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள், திண்டிவனம் சாலையில் உள்ள ரயில்வே ‘கேட்' பகுதியில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பயனாக, ரூ.30.38 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 02-02-2019-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டுகளில் பணி நிறைவு பெற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு ரயில்வே மேம்பாலம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ‘கேட்' நிரந்தரமாக மூடப் பட்டது. போக்குவரத்தில் மாற்றம் செய் யப்பட்டது.
முதற்கட்டமாக, திண்டிவனம் சாலையிலும், அதன் தொடர்ச்சியாக அண்ணா சாலையிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற் கொள்ளப்பட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றாலும், ரயில்வே துறையின் மெத்தனத்தால், பணிகள் முடிவு பெறுவதில் தாமதமாகிறது. ரயில் தண்டவாளம் உள்ள பகுதிக்கு மேலே, பாலம் கட்டும் பணியை ரயில்வே துறை செய்தாக வேண்டும். இதற்காக, சுமார் ரூ.3 கோடியில் தனியே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பணியை தொடங்கி விரைவுபடுத்துவதில் ஒப்பந்ததாரர் தரப்பு அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தி.மலை நாடாளுமன்ற உறுப் பினர் அண்ணாதுரை அடுத்தடுத்து ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் வலியுறுத்தியதால் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
அதன்பிறகும், பணியில் உத்வேகம் இல்லாமல், ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நீண்ட கால தாமதத் துக்கு பிறகு, ரயில்வே தண்ட வாளங்களுக்கு மேலே, கான்கிரீட் தளம் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப் பட்டுள்ளன. மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைத்து, அதன் பிறகு சாலை அமைக்க வேண்டும். தொடக்க நிலையிலேயே இப்பணி உள்ளது. இதனால், ரயில்வே மேம் பாலம் அமைக்கும் பணி, மேலும் தாமதமாகும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “தி.மலையில் ரயில்வே மேம்பால பணியை 2 ஆண்டுகளில் முடிப்பதாக தெரிவித்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் கடந்தும் பணிகள் முடிவுக்கு வரவில்லை. ரயில்வே மேம்பாலம் பணி முடிவுக்கு வராததால், தி.மலை நகரில் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணியை தீவிரப்படுத்தி முடிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago