விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகன் தாக்கல் செய்த மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காகிதக்கூழ் மற்றும் களிமண் போன்ற பொருட்களை பயன்படுத்தி, விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமலும், சட்டவிதிகளை பின்பற்றாமலும் தங்கள் தொழிலில் காவல் துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இடையூறு செய்வதுடன், சீல் வைத்து மூடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டும், மனிதாபிமானமற்ற முறையில் கலைஞர்கள் தாக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
» பொழுதுபோக்கும் 100 நாள் வேலை பணியாளர்கள்: நீதிபதி கிருபாகரன் வேதனை
» வெள்ளை அறிக்கை: குடும்ப கடன் ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த இளைஞர்
எனவே, சட்டரீதியான நடவடிக்கைகள் பின்பற்றாமல் விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று (ஆக. 10) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அஸ்வத்தாமன், அரசு தரப்பில் கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.
வழக்கு குறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago