அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பண மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று கொடுத்தபுகாரில் கூறியுள்ளதாவது:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2002-ல் எனக்கு பழக்கமானார். இந்த நிலையில், முன்தொகையாக கமிஷன் கொடுத்தால் அரசு ஒப்பந்தப் பணிகள் தருவதாக 2016 ஜனவரியில் வேலுமணி என்னிடம் கூறினார். அதன்பேரில் 2016 மார்ச் 6-ம் தேதி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று 2 தவணையாக ரூ.1.20 கோடி கொடுத்தேன். அவர் சொன்னபடி, அவரது நேர்முக உதவியாளர் பார்த்திபனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால், உறுதி அளித்தபடி ஒப்பந்தப் பணி எதுவும் எனக்கு தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை 19-ம் தேதி எஸ்.பி.வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ‘நீ கொடுத்த பணம் சம்பந்தமாக இனிமேல் என்னை சந்திக்க வரக் கூடாது. அதையும் மீறி வந்து பணம் கேட்டால் உன்னையும், குடும்பத்தையும் முகவரி இல்லாமல் ஆக்கிவிடுவேன்’’ என்று மிரட்டி அனுப்பிவிட்டார்.
இதுசம்பந்தமாக குறுஞ்செய்தி, பேச்சு பதிவு உட்பட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அரசு ஒப்பந்தப் பணி தருவதாக ஏமாற்றி, பணம் பெற்று மோசடி செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உதவியாளர் பார்த்திபன், வினோத் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எனக்கு ரூ.5 லட்சம் மட்டும் திரும்ப கிடைத்தது. அதுபோக, ரூ.1.20 கோடியை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் மீது புகார்
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த டி.எஸ்.தேவேந்திரன் என்பவர் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
கால்நடை துறை அமைச்சராகஇருந்த உடுமலை கே.ராதாகிருஷ் ணனிடம் 20 ஆண்டுகளாக அலுவலகஉதவியாளராக பணியாற்றி வந் தேன்.
கடந்த 2018-ல் கால்நடை துறையில் அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு அறிவிப்பு வந்தது. இதையடுத்து, அவர் என்னிடம், ‘‘உனக்கு தெரிந்த யாருக்காவது அரசு பணி வேண்டுமானால் என்னிடம் அழைத்து வா’’ என்றார். அதன்பிறகு, எனக்கு தெரிந்த பலரிடம் இதுபற்றி கூறினேன். அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி பலரும் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை என்னிடம் கொடுத்து, அமைச்சரிடம் சிபாரிசு செய்யச் சொல்லி கேட்டார்கள்.
நானும் அமைச்சர் கூறியபடி, அவர்கள் கொடுத்த பணத்தை எல்லாம் அவரது பினாமியான ரமேஷிடம் கொடுத்தேன். இவ்வாறு ரூ.1.50 கோடி பெற்றுக் கொடுத்தேன்.
இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட அரசு வேலை நீதிமன்றம் மூலமாகதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாறியது. சுமார் ரூ.1.50 கோடியை திருப்பிகேட்டபோது பணத்தை தரமுடியாதுஎன்று கூறி வெளியே அனுப்பிவிட்டார். நான் மீண்டும் அவரையும், ரமேஷையும் தொடர்பு கொண்டபோது அவர்கள் பணத்தை தரமுடியாது, தகராறு செய்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்டுகின்றனர். பணம் கொடுத்தவர்கள், ‘வேலை வாங்கிக் கொடு. அல்லது எங்கள் பணத்தை திருப்பி வாங்கிக் கொடு’ என பிரச்சினை செய்கின்றனர். இந்த பண மோசடியில் எனக்கு எந்த பங்கும் இல்லை. நடுவில் நின்று பணத்தை கைமாற்றி விட்டேன் அவ்வளவுதான்.
எனவே, முன்னாள் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது பினாமி டி.ரமேஷ் செய்த மோசடி பணம் ரூ.1.50 கோடியை திரும்ப பெற்றுத் தரவேண்டும். கொலை மிரட்டல் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் அவர் கூறியுள்ளார். அவரைநேற்று போலீஸார் காவல் ஆணையர்அலுவலகத்துக்கு வரவழைத்து இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago