தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது.
அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.
» 'பப்ஜி' மதன் வழக்கு: தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 345 வாகனங்கள் பறிமுதல்: 760 பேர் மீது வழக்குப் பதிவு
அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக, இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை் நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று (ஆக.09) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago