பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு- முன்னாள் துணைவேந்தர் முதல்வருக்கு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்குமாறு, முதல்வருக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப்பட்டியலில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு அரசுப் பணிகளிலும், கல்வியிலும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 130-வது சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, 30 மாதங்கள் ஆகிவிட்டன.

இடஒதுக்கீட்டின் கீழ் வராதவர்கள் மட்டும் இதில் இடம்பெறலாம். மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார இடஒதுக்கீட்டுக்கான தகுதியை வகுத்துக்கொள்ளலாம்.

பொருளாதார இடஒதுக்கீட்டை ராஜஸ்தான், மேற்குவங்கம், கேரளம், சத்தீஸ்கர் உள்பட 15 மாநிலங்கள், தங்களின் பொருளாதார அளவுகோலின்படி அமல்படுத்திவிட்டன. சமூக நீதியை செயல்படுத்துவதில் எப்போதும் தமிழகம்தான் முன்னிலையில் இருக்கும் ஆனால், மக்கள் நலம்சார்ந்த இடஒதுக்கீடு குறித்து முடிவுசெய்யாமல் தமிழகம் இருப்பது விந்தையாக இருக்கிறது.

இந்த இடஒதுக்கீட்டால், இதர வகையிலான இடஒதுக்கீட்டுப் பலன்களை பெறுவோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட அண்ணா, கருணாநிதி வழியில் வெற்றிநடை போடும் தற்போதைய தமிழக அரசு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையைப் பரிசீலித்து உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றுநம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டால், இதர வகையிலான இடஒதுக்கீட்டுப் பலன்களை பெறுவோருக்குஎவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்