சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை இன்று காலையுடன் முடிவுக்கு வந்தது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மக்கள் அதிகம்கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பிரிக்கில்ன் சாலை வரை, ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை,

ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவிமையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல்அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் இன்று காலை 6 மணி வரை செயல்பட தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, வணிகர் சங்க நிர்வாகிகள் தடை விதிக்கக் கூடாது. வேண்டுமென்றால், நேர கட்டுப்பாடு விதிக்கலாம் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி விதித்த தடை இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. தடையை நீட்டிப்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்