மாநில அளவில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆயுதப்படை காவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களும், 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் (பட்டாலியன்) படையினரும் பணிபுரிகின்றனர். சட்டம், ஒழுங்கு காவலர் களைப்போல் இவர்களுக்கும், பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளில் எவ்வித குற்றச்சாட்டில் சிக்காமல் இருந்தால் தலைமைக் காவலர், 23 முதல் 25 ஆண்டில் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.
இவர்களுக்கு மண்டலம் (ரேஞ்ச்) வாரியாகப் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம் என 2010-ல் ஆட்சியில் இருந்த திமுக அரசு அரசாணை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதன்படி இதுவரை ஆயுதப்படையினருக்கு உரிய தகுதியிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் பணிபுரியும் மாவட்டங்களில் 1988-ல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1997-ல் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முயற்சி நடக்கிறது. இருப்பினும், சென்னை போன்ற பெருநகரங்களில் 1984 முதல் 1993-க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் பணியில் சேர்ந்த ஆயுதப்படை யினருக்கு இதுவரை எஸ்.ஐ. பதவி உயர்வு கிடைக்காமல் தலைமைக் காவலர்களாகவே பணிபுரிகின்றனர்.
மேலும் மண்டலம் வாரியாகப் பதவி உயர்வு அளிக்கும்போது, பாரபட்சம் இருப்பதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பதவி உயர்வு அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாரபட்சமின்றி மாநில அளவில் பணி மூப்பு அடிப்படையில் ஆயுதப்படையினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆயுதப்படை காவல் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
பொதுவாக காவல் துறையில் உரிய நேரத்தில் தகுதியான வர்களுக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆயுதப்படை, பட்டாலியனில் குறைந்த எண் ணிக்கையில் காவலர்கள் இருக்கும்போது, காலிப்பணியிடம் அடிப்படையில் முன்கூட்டியே பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆயுதப்படையை பொறுத்த வரை சில குளறுபடி இருப்பது உண்மை. இது தொடர்பாக கன்னியாகுமரி மற்றும் ஓரிரு மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட காவலர்கள் நீதிமன்றத்தை அணுகி யதால் அப்பிரிவில் தொடர்ந்து பதவி உயர்வு அளிக்கப்படாத சூழல் உள்ளது.
மதுரை போன்ற சில மாவட்டங்களில் 1988-ல் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு எஸ்.ஐ.களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிலர் பயிற்சி முடித்து எஸ்.ஐ.யாகவே பணிபுரிகின்றனர். காலியிடங்களைப் பொறுத்து பதவி உயர்வு அளிக்கப்படும். மண்டலம் வாரியாகவே இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதிலுள்ள சில குளறுபடியால் மாநில வாரியாக கேட்கின்றனர். எதுவானாலும், வழக்கு முடிந்த பிறகே சாத்தியமாகும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago