நாட்டின் எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாததால் விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்: தென் மண்டல தலைமை தளபதி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படா மல் உள்ளதால், விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு, இந்திய விமானப் படையின் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் 2 நாள் பயணமாக நேற்று வந்தார். அவரை, தஞ்சாவூர் விமானப் படை நிலைய தளபதி ஜெ.ராம் வரவேற்றார். தொடர்ந்து, அணி வகுப்பு மரியாதை அளிக்கப் பட்டது.

அப்போது, விமானப் படை வீரர்களிடம் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் பேசியது:

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ நிவாரணப் பொருட்கள், ஆக்சிஜன் கொள்கலன்களை விநியோகம் செய்வதற்காக, தஞ்சாவூர் விமானப் படை நிலைய வீரர்கள் மேற்கொண்ட பணி பாராட்டத்தக்கது. மேலும், இந்நிலையத்தில் அனைத்துப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, கரோனா சூழ்நிலையைச் சிறப்பாக நிர்வ கித்தது பாராட்டுக்குரியது.

கிழக்கு மற்றும் மேற்கத்திய கடற்பரப்பில் இந்திய விமானப் படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதில் முன்னிலை வகித்த இந்நிலைய வீரர்களைப் பாராட்டுகிறேன். நாட்டின் எல்லை பிரச்சினை தீர்க்கப்படாத நிலை யில், விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கான திறன், நெகிழ்வுத் தன்மையுடன் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட் டமைப்பு மேம்பாட்டுத் திட்டங் களை அவர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்