ஆதார் இணையதள சர்வர் பழுதடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகப் புதிய ஆதார் கார்டு, ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
தற்போது வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்ட சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாகும். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கும், பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுவது தவிர்க்க முடியாதது. அவர்கள் முன்பு ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது.
ஆதார் முகவரி மாற்ற முன்பு ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய இருந்தது.
தற்போது ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை மாற்ற விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in -க்கு சென்று யார் வேண்டுமென்றாலும் அவர்களுக்கான சரியான ஆவணங்களைக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து முகவரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த எளிய நடைமுறை வந்தபிறகு பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டுகளில் உள்ள திருத்தங்களை மிக எளிதாக மேற்கொண்டு வந்தனர்.
ஆதார் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியமாகும். ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில், உங்களால் முகவரியை மாற்றம் செய்ய முடியாது.
இந்நிலையில் சமீப காலமாக ஆதார் வெப்சைட் சர்வர் அடிக்கடி பழுதாகிறது. ஒரு முறை பழுதானால் அது சரியாக ஒரு வாரம் ஆகிவிடுகிறது. அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்த ஆதார் வெப்சைட் சர்வர் இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதனால், பொதுமக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆதார் கார்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அதேபோல், புது கார்டு விண்ணப்பிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கரோனா ஊரடங்கு முடிந்து மக்களும் தங்கள் அன்றாடப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். வாடகை வீடு கட்டணம் உயர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை மாற்றியுள்ளனர். அதனால், ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள இ-சேவை மையங்களில் அதிகளவு மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதுபோல், கணிணி வைத்திருப்போர் அவர்களே அந்தத் திருத்தங்களை மேற்கொள்ளவும் செயகின்றனர்.
எனினும், கடந்த 10 நாட்களாக ஆதார் வெப்சைட் சர்வர் பழுதடைந்துள்ளது. அந்த இணையதளத்தைத் திறக்க முடியவில்லை. அப்படியே திறந்தாலும் ஓடிபி எண் வந்தபிறகு அதற்கான ஆவணங்களைப் பதவிவேற்றம் செய்வதற்குள் சர்வர் பழுதடைந்து விடுகிறது. இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து இ-சேவை ஊழியர்கள் கூறுகையில், ‘‘ஆதார் இணையதள சர்வரை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் பழுதுநீக்க வேண்டும். ஆனால், சர்வர் பழுதால் ஒரு வாரமாக மக்கள் திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. எனினும் ஏற்கெனவே திருத்தங்களை மேற்கொண்டவர்களுக்கான ஆதார் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடிகிறது, ’’ என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago