தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை

By செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடை யாருக்கு தமிழில் நேற்று அர்ச்ச னைகள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ்முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் நேற்று ‘அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, பெருவுடையாருக்கு தமிழில் நேற்று அர்ச்சனைகள் நடைபெற்றன. தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி கும்பிட்டனர்.

ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் கருவறைகளிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று தமிழில் அர்ச்சனை செய்யப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE