தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
» ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்
» ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் இது: திருச்சி சிவா
கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாகப் படிக்க: கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாகப் படிக்க: வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை: முதல்வர் ஸ்டாலின்
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாகப் படிக்க: செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாகப் படிக்க: ஊரடங்கில் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?- முழு விவரம்
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுமையாகப் படிக்க: வீடுவீடாகக் கண்காணிக்கக் குழு; நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை என்னென்ன?
ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முழுமையாகப் படிக்க: ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago