விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில், கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கல்வி மையம் மூலம், ஏழு முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதை ரத்து செய்யக் கோரியும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
» உதகையில் 3 நாள் பயணம்: கடும் மேகமூட்டத்தால் சாலை மார்க்கமாகக் கோவை சென்ற குடியரசுத் தலைவர்
» குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் சங்கங்கள், கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக. 06) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறி, அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தற்போதைய நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும் எனவும், திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளபோதும், அதுவரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால், அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், விழுப்புரம் மையத்தின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை எனவும் கூறி, அந்த அறிவிப்பை ரத்து செய்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர்.
விசாரணையின்போது, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும் என்றபோதும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago