‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இனி வீடு தேடி வரும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மாத்திரைகள்: மாதந்தோறும் மருந்துக்காக முதியவர்கள் அலைய வேண்டியதில்லை

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இனி மாதந்தேறும் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகள் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தொற்றா நோய் களுக்கான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட அளவில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘பொதுமக்கள் அளிக்கும் மனுக் களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அறிவிக்கப்பட்டு தற்போது 90 நாட்களுக்கு முன்னதாகவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படு கிறது. அரசு அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாற்றப்படுவார்கள்’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களைத் தேடி மருத்துவம்

வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பேரணாம்பட்டு வட்டாரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 3,500 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகள் விநியோகம் செய்ய உள்ளனர். இதற்காக, மகளிர் திட்டம் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங் களில் பதிவு செய்துள்ள நோயாளி களுக்கு மருந்து, மாத்திரைகளை மாதந்தோறும் வாங்கிச் சென்று அவர்களின் வீடுகளில் வழங்கு வார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.1,000 மதிப்பூதியமாக வழங்கப் படும். மேலும், நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரத்தத்தில் சர்க்கரை அளவை குளுக்கோ மீட்டரில் அளப்பது, ரத்த அழுத்தத்தை பரிசோதித்து குறிப் பெடுக்க வேண்டும். 3 மாதங் களுக்கு ஒருமுறை நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு பரிசோ தனைக்காக செல்ல வேண்டும்.

அதேபோல், மருத்துவமனை களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க ஒரு குழுவினர் தனி வாகனத்தில் செல்லவுள்ளனர். ஒரு பிசியோதெரபி (இயன்முறை மருத்துவம்) மருத்துவர், ஆண் செவிலியருடன் இயங்கும் இந்த குழுவினர் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதுடன் ஊசிகளையும் செலுத்துவார்கள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் மற்றும் கரடிகுப்பம் சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளு மன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மருத்துவக் குழுவினரின் வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் முனிரத்தினம் முன்னிலை வகித் தார். இந்தத் திட்டத்தின் கீழ் கொடைக்கல் மற்றும் கரடிகுப்பம் சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட 970 பேர் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்