புதுச்சேரியில் ரூ. 320 கோடியில் புதிய சட்டப் பேரவை வளாகம் கட்ட நிதி: மத்திய நிதி அமைச்சரிடம் மனு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ரூ. 320 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட நிதிக்கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக மனு தந்தனர். முதல்வர் ரங்கசாமி அளித்த கடிதத்தையும் அளித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தலைமை செயலகம் கடற்கரை சாலையில் தனியாக உள்ளது. தலைமை செயலகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட ரங்கசாமி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலை தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சுமார் ரூ.320 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு, நாடாளுமன்ற நிதி பெற புதுச்சேரி அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே புதுவை பேரவைத் தலைவர் செல்வம், நாடாளுமன்றத் தலைவர் ஓம்பிர்லாவிடம், சட்டப்பேரவை கட்ட நிதி கோரியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதியுதவி பெற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏ அசோக்பாபு, சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

இவர்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்தனர். அப்போது முதல்வர் ரங்கசாமி அளித்த நிதியுதவி கோரும் கடிதத்தை அளித்தனர். கடிதத்தை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கடிதம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து மத்திய அமை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்