வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் வழக்கு: நாளை விசாரணை

By ஆர்.பாலசரவணக்குமார்

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015-ல் தாக்கல் செய்த வழக்கு, வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கத் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்த்து.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தும்பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (ஆக. 04) விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5-ம் (நாளை) தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். நாளை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்