சாத்தூர் தொகுதியில் வைகோ போட்டியிட வாய்ப்பு: மக்களவை தேர்தல் வாக்குகளை வைத்து கணிப்பு

By குள.சண்முகசுந்தரம்

மதிமுக பொதுச்செயலர் வைகோ இந்தமுறை சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக, தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று திமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி னார். அந்தத் தேர்தலில் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவை 5,724 வாக்குகள் பின்னுக்குத் தள்ளி, 45,823 வாக்குகள் பெற்றார். இந்த கணக்குகளை வைத்து சாத்தூர் தனக்கு சாதகமாக இருக்கும் என அவர் கணக்குப் போடுவதாகச் சொல் லப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைமைக் கழகப் பொறுப்பாளர் ஒருவர், ’’திமுகவில் இருந்த காலம் தொட்டே பெரும்பாலும் விருதுநகர் மாவ ட்டத்தை மையப் படுத்தியே தேர்தல் களம் கண்டுவரும் வைகோ, இம்முறை சாத்தூர் தொகுதியை விரும்புவதற்கு சாத்தூர் தொகுதியில் நாயுடு சமூகத்தினர் கணிசமாக இருப்பதும் ஒரு காரணம்.

சாத்தூர் மதிமு கவுக்கு சாதகமான தொகுதி என் பதை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கும் வைகோ, அந்தத் தொகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக மதிமுக மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் மருத்துவர் ரகுராமை ஒரு வருடத்திற்கு முன்பே களத்தில் இறக்கி விட்டார். சாத்தூரில் போட் டியிடாத சூழ்நிலை ஏற்பட்டால், அடுத்த தேர்வு நிச்சயம் கோவில்பட்டியாக இருக்கலாம்’’ என்றார்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற மூன்று பிரதான கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தலா ஐம்பது தொகு திகளின் பட்டியலை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவிடம் ஏற்கெனவே அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மீதியுள்ள தொகுதிகள் மதிமுகவுக்கு மாத்திரமின்றி புதிதாகக் கூட்டணிக்கு வரும் சிறு கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம். இதில்லாமல், எந்தக் கட்சியையும் சாராத சமூக ஆர்வலர்கள் சிலரையும் மக்கள் நலக் கூட்டணி ஆதரிக்கலாம் என்றும் மதிமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

சாத்தூர் தொகுதியில் வைகோ போட்டி குறித்து விருதுநகர் மாவ ட்ட மதிமுக செயலர் ஆர்.எம்.சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, ’’மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதி சாத்தூர் என்பதில் சந்தேகமில்லை. இங்கு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத் தைகளும் வலுவாக இருக்கிறார்கள். மருத்துவர் ரகுராம் கடந்த ஒரு வருடமாக சாத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடி வருவதோடு மட்டுமில்லாமல் முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

பொதுவாக, இத்தொகுதியில் போட்டி யிடப் போகிறேன் என்று வைகோ முன் கூட்டியே சொல்லமாட்டார். ஒருவேளை தொகுதிப் பங்கீட்டில் சாத்தூர் எங்களுக்குக் கிடைத்தால், அங்கு வைகோ போட்டியிடும் வாய்ப்புண்டு. வைகோவிற்கு ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்