புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 1,800-ஐ நெருங்கியுள்ள நிலையில், புதிதாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.3) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,664 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-50, காரைக்கால்-11, ஏனாம் 8, மாஹே-4 என 73 (1.29 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 168 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 717 பேரும் என மொத்தமாக 885 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,795 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,800-ஐ நெருங்கியுள்ளது. புதிதாக 132 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 452 (97.79 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
» ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு
» பெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காலை சிற்றுண்டி அளித்து ராகுல் காந்தி ஆலோசனை
இதுவரை 15 லட்சத்து 13 ஆயிரத்து 612 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 278 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 372 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago