விருதுநகர் அருகே தனியார் பேருந்து ஒன்று ஹோட்டலுக்குள் புகு ந்தது. இதில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள இருக்கண் குடியில் இருந்து பாலவனத்தம், அருப்புக் கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. பாலவனத்தம் கிராமத்தில் சென்றபோது பேருந்தின் இடது முன்பக்க டயர் வெடித்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடதுபுறமாக உள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது.
இதில், பேருந்து ஓட்டுநர் நத்தத்துப் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (49), ஹோட்டல் புரோட்டா மாஸ்டர் மீராஉசேன் (50), ஹோட்டலுக்கு பார்சல் வாங்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த தனபால் (19), பெண் பயணி ஒருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேருந்து மோதியதில் ஹோட்டலின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காஸ் அடுப்பு, சிலிண்டர்கள் பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்டன. சிலிண்டரில் இருந்து காஸ் கசிவும் ஏற்பட்டது. விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சிலிண்டரில் இருந்து வெளியேறிய காஸ் கசிவு நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago