தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள் ளன. இந்த நிலங்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங் களை மீட்கவும், கோயில் நிலங்களின் விவரங்களை இணையத்தில் பதி வேற்றம் செய்யவும் இரு குழுக்களை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அற நிலையத் துறைக்கு சொந்தமான 44,121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் பெருமளவு ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தாமாக முன்வந்து வழக்கு
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை பாது காப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி ஆர்.மகா தேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலை யத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நூறு ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் பழமையான கோயில்களாக கருதப் படுகின்றன. 32,935 கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. 6,414 கோயில்கள் சிறிய அளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.
பாதி சிதிலமடைந்த நிலையில் 530 கோயில்களும், முழுமையாக சேதமடைந்த நிலையில் 716 கோயில் களும் உள்ளன. கோயில்களை பாது காக்கவும், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இணையத்தில் பதிவேற்றம்
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூ லிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் பாதுகாப்பு அறை அமைத்து சிலைகளை அங்கு வைத்துபாதுகாக்க வேண்டும். சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதுடன், அந்த நிலங்களுக்கு உரிய வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். கோயில் நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். கோயில் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறையின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
மத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்க வேண்டும். கோயில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். கோயில் நிலங்களைத் திருடியவர்கள், சேதப்படுத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தனர்.
அதேநேரத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் தொடர்ந்து பல வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘கோயில் சொத்து களை மீட்க அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். கோயில் சொத்துகளின் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆக்கிரமிப் பாளர்களுக்கு உதவிய அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.
75 வழிகாட்டுதல்கள்
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபா கரன், பி.புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே வழங்கிய 75 வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். தற்போதைய தகவல் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகத் தெரிகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங்களை மீட்கவும், கோயில் நிலங்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் இரு குழுக்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago