இந்திய - இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை (பிப்.20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கையில் இருந்து கலந்து கொள்வதற்காக 6,500 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
கடலில் இயற்கைச் சீற்றம், புயல், பேராபத்து ஆகிய காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் என். நடராஜன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனுக்கு அனுப்பிய அழைப்பை ஏற்று தமிழகத்தில் இருந்து கச் சத்தீவு திருவிழாவுக்கு செல்ல 93 விசைப்படகுகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன. இப் படகுகளில் 2,613 ஆண்கள், 717 பெண்கள், ஆண் குழந்தைகள் 98, பெண் குழந்தைகள் 68 என மொத்தம் 3,496 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் படகு உரிமையாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுவிட்டன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சத்தீவு திருவிழாவுக்கு பயணிக்க முடியாது. இலங்கையில் இருந் து 3,000 பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
திருவிழா குறித்து யாழ்ப்பாண துணைத் தூதர் என்.நடராஜன் கூறியதாவது:
முதல் நாளான பிப்.20-ம் தேதி மாலை 5 மணி அளவில் அந்தோனியார் ஆலயம் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து சிலு வைப்பாதை திருப்பலி, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு அந்தோனியார் தேர் பவனி நடைபெறும். திருவிழாவின் 2-வது நாளான 21 ம் தேதி காலை 6 மணி அளவில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடத்தப்படும். அதன் பிறகு தேர் பவனி, அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று திருவிழா முடிவடையும்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய - இலங்கை பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர். நானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறேன் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago