அஞ்சல் துறையில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி முகவர்களுக்கான தேர்வு நடக்கிறது. இதில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள், 50 வயதுவரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான (Postal Life Insurance) நேரடி முகவர்கள் (Direct Agents) தேர்வு நடைபெறுகிறது. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 50 வரை. சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
» நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை (Bio-Data) (அலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன்) “முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
பணிபுரியும் இடங்கள்:
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.08.2021. தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரியலாம்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்: முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008. தொலைபேசி எண் :044- 2827 3637; மின்னஞ்சல் முகவரி: sreeanrindiapost@gmail.com''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago