ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளை கணினி மூலம் பரப்புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரப்படும் என, டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார்.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று (ஜூலை 28) மக்களவையில், "தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொய்யுரு தொழில்நுட்பத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? மனிதக் குரலை மாற்றிப் பேசும் பொய்யொலி தொழில்நுட்பக் கோளாறுகளைத் தடை செய்ய இந்தியக் குற்றவியல் சட்டத்தில் வழிவகைகள் உள்ளதா?" என, மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில் நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் அளித்த பதில்:
"தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் பாதுகாப்பு ஆபத்தை விளைவிக்கும் பொய்யுரு தொழில்நுட்பம் கணினியின் உதவியால் ஆள்மாறாட்ட வேலைகளைக் காணொலி மூலம் செய்து பல்வகையான தீமைகளை விளைவித்து வருகின்றது.
» பட்டிலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமை ஆசிரியருக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
» ஜூலை 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 66(C) மற்றும் 66(D)-ன் படி கணினியின் மூலம் ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது சட்டத்துக்குப் புறம்பான, ஏமாற்றுதல் குற்றமாகும். இந்தியக் குற்றவியல் பிரிவு 416-ன் கீழ் இவ்வகை குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும், பொய்யுரு தொழில்நுட்பத்தின் மூலம் வரும் ஆபத்துகளைத் தடுக்க, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இடைநிலை நிறுவனங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளை கணினி மூலம் பரப்புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரப்படும். தகவல் தொழில்நுட்ப அமைச்சக இணையத்தின் மூலம் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன".
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago