தென்காசி தொகுதியை குறிவைக்கும் தமாகா: அதிக எதிர்பார்ப்பில் முக்கிய நிர்வாகிகள்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் முக்கிய எதிர்பார்ப்புள்ள தென்காசி தொகுதிக்கு தமாகா குறிவைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தென்காசி தொகுதி தமாகாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சி நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள்.

கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை இத்தொகுதி 7 முறை காங்கிரஸ் கட்சி வசமும், தலா 2 முறை அதிமுக, திமுக வசமும் இருந்துள்ளது. 2011-ல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெற்றிபெற்றிருந்தார்.

இத்தொகுதியில் 1996-ல் தமாகா சார்பில் போட்டியிட்ட கே.ரவிஅருணன் வெற்றிபெற்றி ருந்தார். இதனால் இத்தொகுதி மீது தமாகா மேலிடத்துக்கும், உள்ளூர் நிர்வாகிகளுக்கும் எப்போதுமே ஒரு கண் இருந்து வருகிறது.

அதிமுகவுடன் கூட்டணி?

வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக தனது கூட்டணியில் தமாகாவை சேர்த்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தமாகா நிர்வாகிகளிடையே இருக்கிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால் அதிமுக தலைமை 28 தொகுதிகளாவது தமாகாவுக்கு அளிக்கும், அதில் தென்காசி தொகுதியும் ஒன்றாக இருக்கும் என்று தமாகா நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தற்போது அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நீடிப்பதாக சரத்குமார் கூறிவந்தாலும், அதி முக தலைமையிடமிருந்து இன் னும் சாதகமான தகவல் ஏதும் வர ல்லை. இதனால், சமக தலைமை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடாக கடந்த 7-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற சமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசும்போது, “மரத்தின் நிழலில் செடி இருந்தால் அ தனால் வளரமுடியாது. சூரிய ஒளிபட்டால்தான் வளரமுடியும்” என்று பேசினார். தனித்து நிற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை யும் அவர் மறைமுகமாக கூறி னார். இதனால் இம்முறை அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி யில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு இல்லை என்று தமாகா வினர் அடித்துச் சொல்கிறார்கள்.

களமிறங்கிய தமாகா

இந்த பின்னணியில் தற்போது தென்காசி தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தமாகா மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸும், அவரது ஆதரவாளர்களும் களமிறங்கியி ருக்கிறார்கள். இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிப்பதையும், தமாகா ஏற்கெனவே வெற்றி பெற்றிருப்பதையும் தங்களுக்கு சாதகமாக நினைக்கின்றனர் சார்லஸின் ஆதரவாளர்கள்.

கடந்த மாதம் 27-ம் தேதி அவரது இல்லத் திருமணத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அலங்கார வளைவுகள், கட்சி தோரணங்கள் என்று இத்திருமண விழாவை கட்சியின் மாநாடுபோல் நடத்தியிருந்தனர்.

விழாவில் பேசிய ஜி.கே.வாசன், `மூப்பனார் குடும்பத்துக்கு சார்லஸ் விசுவாசியாக இருந்ததை சுட்டிக்காட்டி பேசினார். இதனால் இத்தொகுதி சார்லஸுக்கு ஒதுக் கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று அவரும், அவரது ஆதர வாளர்களும் 100 சதவீதம் நம் பிக்கையில் உள்ளனர்.

அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில கட்சி நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற காய்நகர்த்தி வருகின்றனர். அதிமுக தலைமையில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியா னதும் தென்காசி தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் வெளிப் படையாக முழுவீச்சில் களமிறங்க தமாகாவினர் திட்டமிட்டிருக்கி றார்கள்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்