தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவும், மாற்றப்பட்ட அதிகாரிகள் வகித்த பதவி, தற்போதைய இடமாற்றம் விவரம்:
1. ரயில்வே போலீஸ் ஐஜியாக (சென்னை) பதவி வகிக்கும் சுமித் சரண் மாற்றப்பட்டு, ஊர்க்காவல் படை ஐஜியாக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகிக்கும் தினகரன் மாற்றப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. திருச்சி ஆயுதப்படை டிஐஜியாகப் பதவி வகிக்கும் கயல்விழி மாற்றப்பட்டு, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்
4. திருவாரூர் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் மாற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. சென்னை சிபிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்.பி. விஜயகுமார் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவாளி பிரியா மாற்றப்பட்டு, தஞ்சாவூர் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. தஞ்சாவூர் எஸ்.பி. தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு, சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. அடையாறு காவல் துணை ஆணையராகப் பதவி வகிக்கும் விக்ரமன் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகப் பதவி வகித்து வரும் தேவராணி மாற்றப்பட்டு, சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-3 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11. சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12.நில அபகரிப்பு தடுப்பு, சிறப்புப் பிரிவு எஸ்.பி. ஷியாமளா தேவி மாற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் (சென்னை) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago