வாரியப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட வாரியத்தின் பணிகளை நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பழனியைச் சேர்ந்த கருப்பசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் நாட்டு ஆடு இனங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாரம்பரிய ஆட்டு இனங்கள் முழுமையாக அழிந்துவிடும் சூழல் உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய ஆட்டு இனங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை. இந்த ஆடுகளைக் குரும்பர் இன மக்கள் அதிகளவில் வளர்த்து வந்ததாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தற்போது வளர்க்கப்படும் ஆடுகள் வணிக நோக்கதிற்காக வளர்க்கப்படுகின்றன.
எனவே, தமிழகத்தின் பாரம்பரிய ஆடு இனங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆட்டு வாரியப் பதவியில் குரும்பக் கவுண்டர் சமூக மக்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள், ''ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை வாரியப் பதவிகளில் நியமிக்க உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் வாரியப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள், வாரியத்தின் பணிகள், அதன் முக்கியத்துவங்களை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago