பாகுபாடின்றி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தபொது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி

By செய்திப்பிரிவு

முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்ற பாகுபாடின்றி, அனைத்து மாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி கள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்- இளைஞர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலை மைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகள் இயக்குநர் ரா.செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ப.பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

டெல்டா பகுதியில் உள்ள மாவட் டங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க் கள், எம்பி-க்கள் உள்ளிட்டோர் தெரிவித்த புதை சாக்கடைத் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகள் தொடர்பான பணிகளை விரைவாக முடிக்கவும், பணிகளை விரைவாக முடிப்பதில் உள்ள சிரமங்களைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 48 ஆண்டுகள் ஆன காவிரி பாலத்தை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர். எனவே, அங்கு புதிய பாலம் கட்டும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் தொடங்கப்படவுள்ளது. கோணக்கரையில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் சாலைகள் அமைக்க விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து ஆய்வு செய்து, அதேபோல மற்ற மாநகராட்சி களிலும் விடப்பட்ட டெண்டர்களில் ஏதேனும் குளறுபடிகள் இருப் பது தெரிய வந்தால், அந்த டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர்கள் விடப்படும்.

திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு முதல்வர் இசைவு தெரிவித்தால் பணிகள் தொடங்கப்படும். மாநக ராட்சி யுடன் இணைவதற்கு விருப் பம் இல்லாத பகுதிகளை கட்டாயப் படுத்தப்போவதில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்