‘‘கீழடி அகழ் வைப்பகம் பணி விரைந்து முடிக்கப்படும்,’’ என சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றை இன்று சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உடனிருந்தார்.
அப்போது அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்திற்கு கட்டி முடிக்க பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும், தமிழர் நாகரீகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்படுகிறது. அப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பார்வையிட்ட சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago