கரகாட்ட மோகனாம்பாளின் சகோதரி மகன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண்: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் திருப்பம்

By செய்திப்பிரிவு

வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோக னாம்பாள் (55), கடந்த சில மாதங்களாக காட்பாடி தாராபட வேடு பகுதியில் வசிக்கும் ஜமுனா என்ற கரகாட்ட கலை ஞர் வீட்டில் வாடகைக்கு குடி யிருந்தார். மோகனாம்பாள் தங்கியிருந்த வீட்டில் காட்பாடி போலீஸார் கடந்த மாதம் 25-ம் தேதி நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை, வீடுகளின் அடமான பத்திரங்கள் உள்ளிட்டவை பறி முதல் செய்யப்பட்டன.

போலீஸாரால் தேடப்பட்ட மோகனாம்பாள் அவரது சகோதரி நிர்மலா ஆகியோர் கடந்த 9-ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், நிர் மலாவின் மகன் சரவணன் மூலம் செம்மரம் கடத்தல் தொழி லில் கிடைத்த பணத்தை வட்டி தொழிலில் மோகனாம்பாள் முதலீடு செய்துள்ளது தெரிய வந்தது. மேலும், செம்மரம் கடத்தல் சம்பவத்தில் தொடர் புடைய முக்கிய நபர்கள் பட்டிய லையும் போலீஸாரிடம் மோக னாம்பாள் தெரிவித்துள்ளார்.

அந்த பட்டியலில் உள்ள அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபுவை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். செம்மர கடத்தல் தொழிலில் முக்கிய குற்ற வாளியான சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீ ஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மாஜிஸ் திரேட் மோனிகா முன்னிலை யில் சரவணன் சரணடைந் தார். அவரை 15 நாள் காவ லில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை யடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் சரவணன் அடைக்கப்பட்டார்.

விரைவில் சரவணனை காவ லில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீஸார் திட்ட மிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்