பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனைவி மனு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

By செய்திப்பிரிவு

தடகள வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகளப் பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். பயிற்சிக்கு வந்த தனக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மே 28ஆம் தேதி நாகராஜனைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஜூன் 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து அவரை விடுதலை செய்யக் கோரி, அவரது மனைவி கிரேஸ் ஹெலினா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “எந்தக் காரணமும் இல்லாமல் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை. மொழிபெயர்க்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை.

ஒரு வழக்கில் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நாகராஜனை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு சட்ட விரோதமானது. வழக்கு தொடர்பான சம்பவம் 2013 முதல் 2020 வரை நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்க எந்த அவசியமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக உள்துறைச் செயலாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்