நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்குத் தடை கோரிய வழக்கில் உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''நெல்லை மாவட்ட சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக 3 ஆண்டு காலத்துக்கு 2017-ல் நியமனம் செய்யப்பட்டேன். கரோனா பரவல் காரணமாக ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனது பதவிக் காலம் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என் பணிக் காலம் முடியும் முன்பே, அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ஜூன் 14 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்துக்காக விண்ணப்பம் பெறத் தடை விதித்தும், அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு விண்ணப்பித்துள்ள வழக்கறிஞர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.''
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். மனு தொடர்பாக உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago