சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தேமுதிக எம்எல்ஏ சேகர் பேச்சு

By செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அதிமுகவுடனான கணக்கைத் தீர்க்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு என தேமுதிக எம்எல்ஏ சேகர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யுவராஜை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கர், பாலாஜி, பாமக சார்பில் பாலயோகி, மதிமுக சார்பில் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சேகர் பேசியதாவது:

வாஜ்பாய் அரசை, அதிமுக அரசு கவிழச் செய்தது, பாமக தலைவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது, தேமுதிகவின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது, மதிமுக தலைவர் வைகோவை 19 மாதம் சிறையில் அடைத்தது என ஒவ்வொரு கட்சிக்கும் அதிமுகவுடன் கணக்கு பாக்கி உள்ளது. இந்தத் தேர்தலில் அந்தக் கணக்கை தீர்க்கும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இக்கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்