ஊரடங்கில் கோயில் திருவிழாக்கள் நடைபெறாத ஏக்கம் விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழ்ந்த சிறுவர்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் கோயில்களி்ல் திருவிழா நடைபெறாததால் ஏற்பட்ட ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, சிறுவர்கள் விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழ்ந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடி பிறந்துவிட்டாலே கோயில்களில் பாளையெடுப்பு, பூச்சொரிதல், பூஜை என வரிசைகட்டி திருவிழாக்கள் நடப்பதால் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். இது, சிறுவர்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலையொட்டி அரசு அனுமதி அளிக்காததால் திருவிழாக்கள் நடைபெறவில்லை. பள்ளிக்கும் செல்ல முடியாமல், திருவிழாவும் இல்லாமல் இருப்பதால் சிறுவர்களிடையே ஏக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே விராலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்று கூடி, பால்குடம் எடுத்துக்
கொண்டு, காவடியை சுமந்து கொண்டு, கோயிலுக்கு ஆட்டம், பாட்டத்துடன் செல்வதைப்போன்று அண்மையில் விளையாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரின் கவனத்
தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தோர் கூறியபோது, “எங்கள் ஊரில் அய்யனார், முனியாண்டவர் கோயில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால் சிறுவர்
கள் அதுபோன்று விளையாடி மகிழ்ந்துள்ளனர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE