கருப்பு பூஞ்சை நோயால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி வட்டாட்சியராக பணியாற் றியவர் கா.கலாவதி (53). இவர் திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மாதத் துக்கு முன்பு நடத்தப்பட்ட சோத னையில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, பெருந்துறை சானடோரியம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
அதன்பின்னர் வீட்டில் ஓய் வெடுத்து வந்த நிலையில், கலா வதிக்கு கண்ணில் திடீரென வீக்கம் ஏற்பட்டது. இதனால், நுரையீரலில் ஏதேனும் தொந்தரவு இருக்கும் என கருதி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதியானது.
இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு 20 நாட் களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். கருப்பு பூஞ்சை நோய் தீவிரமாகி முற்றிய நிலையில், அவரது ஒரு கண் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கலாவதி உயிரிழந்தார்.
கருப்பு பூஞ்சை நோய்த் தாக்கு தல் குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதித்தவர் களை கருப்பு பூஞ்சை நோய் (மியூகோர்மைகோசிஸ்) தாக்கும். அதாவது, உடலில் பல்வேறு இணைநோய்கள் இருக்கும் தொற் றாளரின் உடலில் இது தீவிரத் தன்மையோடு இருக்கும். சுவா சிக்கும் காற்றின் மூலம் உட்புகும் பூஞ்சைகள், சைனஸ் எனப்படும் முக உட்புழைகளில் வளர்ந்து, பின்னர் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் இறப்பால் அல்லது புண்களால் கருமை நிறம் தோன்றும்.
இந்த நோய் தீவிரமடையும் போது கண்கள் பாதிக்கப்படுகின் றன. அதனால், அறுவை சிகிச்சை மூலம் கண்களை அகற்றும் நிலை யும் ஏற்படுகிறது. கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டவர்களை சமீப காலமாக கருப்பு பூஞ்சை தாக்கி வருவதால் பலரும் பாதிக்கப்பட் டனர். உடலில் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்போது, தொற்றாளரின் உடலில் கருப்பு பூஞ்சை தாக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இவ்வாறு அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தற் போது கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் பலர் கருப்பு பூஞ்சை தாக்கி சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட் டத்தில் கரோனா தொற்று 2-ம் அலையில் 14 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியுள்ள னர். இந்நிலையில், தற்போது ஊத்துக்குளி வட்டாட் சியர் கலாவதி கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந் துள்ளார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago