முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கி விவசாயி பலி

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை வனப்பகுதியில் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்த விவசாயியை புலி தாக்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் சில கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் முதுமலை வனப்பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தை சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன்(49) மளிகை பொருட்கள் வாங்க வனப் பகுதி வழியே சென்றுள்ளார்.

அப்போது புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று அவரது கழுத்தை கவ்வியுள்ளது. இதில், மூச்சு திணறி கிருஷ்ணன் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சரகர் தயாநந்தன், மருத்துவர் ராஜேஸ்குமார் உட்பட வனத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியின் ஒரு பகுதியை இறந்த குஞ்சுகிருஷ்ணனின் உறவினர்களிடம் வழங்கினர்.

அவர்கள் கூறும்போது, ‘புலி தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக இப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், நாங்கள் ஆய்வு செய்தோம். உயிரிழந்தவர் முதுகுழி கிராமத்தைச் சேர்ந்த வீரன்செட்டியின் மகன் குஞ்சுகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டது. உடலின் அருகில் புலியின் கால்தடங்கள் கண்டறியப்பட்டன. அவர் எதிர்பாராத விதமாக புலியின் வழித்தடத்தில் வந்ததால், புலி அவரை தாக்கிக் கொன்றது’ என்றனர்.

பாதை பழுது:

அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘விவசாயியை கொன்ற புலி ஆட்கொல்லியாக இருக்காது. உடல் நலக்குறைவு காரணமாகவோ, வயது முதிர்வு காரணமாகவோ ஒரு புலி கடந்த சில நாட்களாக இப்பகுதியில் நடமாடி வந்துள்ளது. இந்நிலையில், துரதிஷ்டவசமாக அந்த புலி விவசாயியை தாக்கிக் கொன்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்