அந்தியூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் பலி

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாருக்குச் சொந்தமான பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று விவசாயிகள் பலியாகினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்து பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை அந்தியூரில் நடக்கும் வாரச்சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், பர்கூர் தட்டக்கரையைச் சேர்ந்த சித்தன் (55), சின்ன செங்குளத்தைச் சேர்ந்த மாதேவன் (55), தொட்டைய தம்படியைச் சேர்ந்த சின்னப்பையன் (35), சின்ன செங்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30), மகேந்திரன் (17), கொங்காடையைச் சேர்ந்த சிவமூர்த்தி (45) ஆகியோர், அந்தியூர் சந்தையில் விளைபொருட்களை விற்பதற்காக நேற்று (ஜூலை 18) மாலை அந்தியூர் வந்துள்ளனர்.

அந்தியூர் தேர்வீதியில் உள்ள ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான எலெக்ட்ரிகல் கடை முன்பாக தூங்கியுள்ளனர். ஏற்கெனவே பழுதடைந்திருந்த அந்த கட்டிடம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் அறிந்த அந்தியூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சித்தன், மாதேவன், சின்னப்பையன் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்