அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு; அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இது 59 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி, கடந்த பிப். 25-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனால், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், இளைஞர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். எனவே, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்