வங்கதேசத்தை சேர்ந்தவர் திருப்பூரில் கைது: 2 ஆண்டுகள் தையல் தொழிலாளியாக வேலை பார்த்தவர்

By இரா.கார்த்திகேயன்

2 ஆண்டுகளாக தையல் தொழிலாளியாக வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்தவரை, திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா (28). இவர், திருப்பூர் பாண்டியன் நகர் பின்புறம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகம் எழ, திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரித்தனர். அதில், முகமது சொஹல் ராணா, வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை நேற்று (ஜூலை 16) திருமுருகன்பூண்டி காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா என்பது தொடர்பாக திருமுருகன்பூண்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்