தி.மலை நகராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி யில் 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் வரும் 31-ம் தேதிக்குள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மலை சமுத்திரம் நகராட்சி தொடக்கப் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி நடுநிலை பள்ளி மற்றும் கீழ்நாத் தூர் சேவியர் நர்சரி பள்ளியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பழங்களை வழங்கினார். பின்னர், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். அப்போது, ஆட்சியர் பா.முருகேஷ், கோட்டாட்சியர் வெற்றிவேல், உதவி ஆட்சியர் ரவி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜிதா, நகராட்சி ஆணையாளர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

39 இடங்களில் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை நகராட்சி யில் 39 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஈசான்ய சாலை எஸ்ஆர்ஜிடிஎஸ் தொடக்க பள்ளி, முத்து விநாயகர் கோயில் தெரு சித்தா மருத்துவமனை, போளூர் சாலை 5-வது தெரு ஐசிடிஎஸ் வளாகம், புதுத்தெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி நடுநிலை பள்ளி, ஜனகரபாறைத் தெரு தி பெஸ்ட் தொடக்க பள்ளி, ஆணைக்கட்டித் தெரு குழந்தைகள் நல மையம் உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

மேலும், ராஜராஜன் தெரு அமராவதி முருகையன் பள்ளி, கன்னிக்கோயில் தெரு கன்னிகா பரமேஸ்வரி நடுநிலை பள்ளி, பே கோபுரம் தெரு குழந்தைகள் நல மையம், வாணியங்குளத் தெரு தியாகி அண்ணாமலை உயர் நிலை பள்ளி, ராமகிருஷ்ணா தொடக்க பள்ளி, மத்தலாங்குளத் தெரு டிஎம் கர்மேல் தொடக்க பள்ளி, சுண்ணாம்புகாரத் தெரு ஐசிடிஎஸ் வளாகம், கட்டபொம்மன் தெரு டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

மேலும், தியாகி அண்ணாமலை நகர் டிஎம் தொடக்க பள்ளி, நாவக்கரை ஐசிடிஎஸ் வளாகம், கீழ்நாத்தூர் சேவியர் நர்சரி பள்ளி, காந்திநகர் விடிஎஸ் ஜெயின் மேல்நிலை பள்ளி, ராமலிங்கனார் தெரு நகராட்சி தொடக்க பள்ளி, தேரடி வீதி நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளி, ஐயங்குளத் தெரு ஐசிடிஎஸ் வளாகம், போத்தராஜா கோயில் தெரு நகராட்சி தொடக்க பள்ளி, பாவாஜி நகர் 2-வது தெரு ஐசிடிஎஸ் வளாகம், செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளி, பெரும் பாக்கம் சாலை ஐசிடிஎஸ் வளாகம், தாமரை நகர் நகராட்சி நடுநிலை பள்ளி, அண்ணா நகர் 3-வது தெரு ஐசிடிஎஸ் வளாகம், கோரிமேட்டு 5-வது தெரு சுல்தான்பேட்டை முஸ்லிம் நிதி உதவி பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

மேலும், சமுத்திரம் காலனி நகராட்சி தொடக்க பள்ளி, கானா நகர் நகராட்சி தொடக்க பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு ஐசிடிஎஸ் வளாகம், சூர்யா நகர் நிதி மூன் நர்சரி பள்ளி, முகல்புறா தெரு முஸ்லிம் நடுநிலை பள்ளி, திருக்கோவிலூர் சாலை நகராட்சி தொடக்க பள்ளி, சாரோன் விஷன் மெட்ரிக் பள்ளி, வேட்டவலம் சாலை ஏஎல்சி ஆசிரியர் பயிற்சி பள்ளி, செல்லநேரி தெரு ஜெஜிஎல்ஏ மாடர்ன் பள்ளி, வேட்டவலம் சலை சரஸ்வதி விகாஷ் மெட்ரிக் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்